Crops

விவசாயிகள்
Crops

அறிவுரைகள்
Crops

பார்வையாளர்கள்

தானியங்கி வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனை

தமிழகம் மற்றும் இந்தியாவில், பயிரின் மகசூல் திறனானது பயிர் வளர்ச்சி காலத்தில் பெறப்படும் பருவமழை மற்றும் வானிலையினை பொறுத்தே நிர்ணியக்கப்படுகிறது. சரியான நேரத்தில் சரியான வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகள் கிடைப்பதன் மூலம் வானிலை மற்றும் காலநிலை சார்ந்த இடர்பாடுகளால் பயிர்களில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியம். இடம் மற்றும் காலம் சார்ந்த வானிலை விபரங்களை அதிகரிப்பதன் மூலம் வானிலை முன்னறிவிப்பின் தரத்தினை மேம்படுத்த இயலும். தமிழகத்தின் வட்டார அளவிலான தானியங்கி வானிலை மையத்தில் இருந்து பெறப்படும் தவல்கள் மற்றும் வானிலை முன்னறிவிப்புத் தகவல்களையும் வேளாண் தொழில் நுட்பவிஞ்ஞானிகளின் அறிவுரைகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் வானிலை சார்ந்த தீவிர நிகழ்வுகளால் பயிர்களில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியம்.

(மேலும் படிக்க...)

இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு வேளாண் வானிலை இணையதளத்தில் அடுத்த முயற்சியாக இந்திய அளவில் முதல் முறையாக தானியங்கி வானிலை சார்ந்த வேளாண் அறிவுரையானது விவசாயிகளின் அலைபேசிக்கு குறுந்தகவலாக அனுப்பப்படும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 3.50 கோடி நிதி வழங்கியுள்ளது. இந்த சேவையில் கடந்த கால, நிகழ் கால மற்றும் எதிர்கால வானிலைகளைக்கொண்டு வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள 54 வானிலை சூழல்களில், 108 பயிர்களின் 5 வளர்ச்சி பருவங்களுக்கு தேவையான வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகள் இவ்விணையதளத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு அவரவர் பயிர்களுக்கு பயிர் விதைப்பு தேதியினை அடிப்படையாகக்கொண்டு அலைபேசிக் குறுந்தகவலாக தமிழ் மொழியில் தானியங்கி வானிலை சார்ந்த வேளாண் அறிவுரை (AAS) மென்பொருள் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த தகவல்களை அலைபேசியில் நேரிடையாக பெறுவதற்கு அலைபேசிச் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு வேளாண் வானிலை இணையதளம் (TAWN) மற்றும் தானியங்கி வானிலை சார்ந்த வேளாண் அறிவுரை (AAS) மென்பொருளானது விவசாயிகள் தங்களது சூழ்நிலை மற்றும் பயிருக்கேற்ற அறிவுரைகளை சரியான நேரத்தில் பெற்று நல்ல விளைச்சல் மற்றும் இலாபம் பெறுவதற்கும் இரண்டாம் பசுமை புரட்சியினை நோக்கி செல்வதற்கும் உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

வட்டார அளவிலான வேளாண் ஆலோசனை

தகவல் பலகை

தமிழ் English