இந்த இணையத்தளத்தினை உபயோகப்படுத்திடும் பயனாளிகள் அனைவரும் கீழ்கண்ட விதிகளையும் நிபந்தனைகளையும் ஒத்துக்கொள்ளவேண்டும்

- இந்த இணையத்தளத்தில் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புத் தகவல்கள் எண் கணித கட்டமைப்பினை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. மேலும் 70 - 80 சதவீதம் மட்டுமே சரியானது.

- வானிலை முன்னறிவிப்பு மற்றும் பதிவு செய்யப்பட்ட வானிலைக் காரணிகளில் ஏற்படும் தவறுகளை குறைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

- இந்த இணையத்தளத்தில் வெளியிடப்படும் வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகளானது வட்டார அளவிலான வானிலை முன்னறிவிப்புத் தகவல்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வானிலைக் காரணிகளை கொண்டே உருவாக்கப்படுகிறது. எனவே அவற்றின் சரி விகிதமும் 60 - 70 சதவீதம் மட்டுமே.

- இந்த இணையத்தளத்தில் வெளியிடப்படும் வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகளானது ஒவ்வொரு விவசாயியின் இடம் பயிர் மற்றும் பயிரின் பருவம் ஆகியவற்றினை பொறுத்து மாறுபடும். அனைவருக்கும் ஒரே அறிவுரை பொருந்தாது.

- இந்த இணையத்தளத்தில் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புத் தகவல்கள் மற்றும் வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகளானது விவசாயிகள் தங்களது விவசாய வேலைகளை திறம்படச் செய்ய உதவும் சாதனமே.

- இதனை பயன்படுத்துவதும் தவிர்ப்பதும் பயனாளிகளின் சொந்த விருப்பம் மற்றும் இதன் இலாப நஷ்டங்களும் பயனாளிகளின் பொறுப்பு.

- இதனைக்கொண்டு தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் மீது எந்த சட்டப்ப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்க முடியாது.